Friday, March 2, 2012

சம்ஜோதா:மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது!

NIA identifies another Samjhauta Express bomber
புதுடெல்லி:68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளத்தை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டறிந்துள்ளது.

மத்தியபிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திர பஹல்வான் என்ற சமந்தர் என்பவர் ரெயிலில் குண்டுவைத்த நான்குபேரில் ஒருவர் என்பதை என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது.

மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் உத்தரவின்படி பஹல்வான் ஜம்முவிற்கு சென்று பயிற்சி பெற்றுள்ளார். கடந்த மாதம் கைது செய்யப்பட்ட கமல் சவுகானிடம் விசாரணை நடத்தியபொழுது பஹல்வான் குறித்து தகவல் என்.ஐ.ஏவுக்கு கிடைத்தது.

லோகேஷ் சர்மா, அஸ்வினி சவுகான் என்ற அமித் ஆகியோர் ரெயிலில் குண்டுவைத்த இதர இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆவர். இவர்களில் பஹல்வானும், அஸ்வினி சவுகானும் தலைமறைவாக உள்ளனர்.

கமல்சவுகான், லோகேஷ், அஸ்வினி சவுகான், பஹல்வான் ஆகியோர் இரண்டு குழுவாக பிரிந்து பாகிஸ்தானுக்கு சென்றுகொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்தார்கள் என்பதை என்.ஐ.ஏ கண்டுபிடித்தது.

இரு குழுவினரும் பழைய டெல்லி ரெயில்வே ஸ்டேஷனில் வெடிப்பொருட்களுடன் வந்து இறங்கியுள்ளனர். கையில் இருந்து வெடிக்குண்டின் டைமரை இயக்க முடியாததால் கமல்சவுகானும், லோகேஷும் இதர இருவரின் உதவியை தேடியதாக என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது. ரெயிலில் குண்டுவைத்த பிறகு நான்கு பேரும் ஜெய்ப்பூருக்கு சென்றதாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza