Friday, March 2, 2012

ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூகிள் நீக்கியது!

google
புதுடெல்லி:ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை இணையதளங்களில் இருந்து நீக்கிவிட்டதாக இணையதள சேவை நிறுவனமான கூகிள் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய கலாச்சாரத்தை மோசமாக சித்தரிக்கும் குற்றச்சாட்டை கூகிள் மறுத்துள்ளது. அட்மினிஸ்ட்ரேடிவ் சிவில் நீதிபதி ப்ரவீண் சின்ஹாவுக்கு ஆவணம் மூலம் தெரிவித்த பதிலில் கூகிள் இதனை கூறியுள்ளது. கூகிளின் இந்திய சேவைதாரர்களுக்கு நோட்டீஸ் கிடைத்ததை தொடர்ந்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கிவிட்டதாக கூகிள் கூறுகிறது.

ஆர்க்குட்டும், யூ ட்யூபும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. சோசியல் நெட்வர்கிங் இணையதளங்களில் மதம் மற்றும் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை நீக்கக்கோரி நீதிமன்றம் 22 நெட்வர்கிங் இணையதளங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza