Thursday, March 1, 2012

சிரியா:மரண எண்ணிக்கை 7500-ஐ தாண்டியது!

Syrian forces have killed more than 7500
டமாஸ்கஸ்:சிரியாவில் சாதாரண மக்கள் மீது கடந்த 11 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 7500ஐ தாண்டியுள்ளது. பெண்களும், குழந்தைகளும் உள்பட தினந்தோறும் 100 பேர் பலியாகி வருவதாக ஐ.நா அண்டர் செகரட்டரி ஜெனரல் லேன் பாஸ்கோ அறிவித்துள்ளார்.

குண்டுவீச்சு தொடரும் ஹிம்ஸில் செவ்வாய்க்கிழமை 104 பேர் கொல்லப்பட்டனர். ஹமாவில் நடந்த கூட்டுப் படுகொலைகளில் 35 பேரும், பாப் அம்ரில் 26 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில், சிரியாவின் பிரச்சனையில் அல்காயிதா ஆதாயம் தேட முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சிரியா எதிர்ப்பாளர்களுக்கு அல்காயிதாவின் தற்போதைய தலைவராக கருதப்படும் அய்மான் அல் ழவாஹிரி ஆதரவு தெரிவித்திருந்தார்.

இச்சூழலில் எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதை தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜே.கார்னி கூறினார்.

சிரியாவின் பாப் அம்ரில் மக்கள் குடிநீர், உணவு கிடைக்காமல் நரகவேதனையை அனுபவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக இப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சிரியாவுக்கு நிவாரணங்களை அனுப்புவதாக சீனா நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

பல தினங்களாக பாப் அம்ரில் சிக்கிய லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஃபோட்டோக்ராஃபர் பால் காண்ட்ராய் லெபனானுக்கு சென்றுள்ளார். ஆனால் பிரஞ்சு பத்திரிகையாளர் எடித் போவியர் பாப் அம்ரில் சிக்கியுள்ளார். புதிய அரசியல் சாசனத்திற்கு அங்கீகாரம் அளிப்பதற்காக சிரியாவில் நடந்த விருப்ப வாக்கெடுப்பிற்கு பிறகு தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. புதிய அரசியல் சாசனத்தில் நேற்று முன்தினம் சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆசாத் கையெழுத்திட்டார். அதற்கு பிறகு ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza