பீஜிங்:வடமேற்கு சீனாவில் ஜின்சியாங்கில் நடந்த உள்நாட்டு கலவரத்தில் குறைந்தது 20 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஜின்சியாங்கில் கார்கிலிக் சுயாட்சி பிரதேசத்தில் உள்ள சந்தையில் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது. ஏழுபேர் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலியானார்கள்.
ஜின்சியாங்கில் பல வருடங்களாக ஹான் பிரிவினருக்கும், உய்கூர் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் குறைந்தது 200 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பிறகு சீன அரசு பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியது.
கடந்த ஜூலை மாதம் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் ஏராளமான உய்கூர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று நடந்த தாக்குதலை ‘தீவிரவாத தாக்குதல்’ என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அதேவேளையில், நாட்டின் முக்கிய சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்குவதற்கான நடவடிக்கைக்கு எதிரான போராட்டமே ஜின்சியாங்கில் நடந்தது என்று ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேல்ட் உய்கூர் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment