சென்னை:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கோவில் விழாவிற்கு சென்றவர்கள் சங்கரன்கோவிலில் உள்ள மசூதி மீது செருப்பை வீசியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் மத்தியில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
‘இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உடனேயே காவல் துறை விரைந்து செயல்பட்டிருந்தால் மோதலை தடுத்திருக்கலாம். தற்போது பிரச்சனைகள் அதிகமாகாமல் இருக்க காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் எனவும், சங்கரன் கோவிலில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறும், மோதல் அதிகமாகாமல் உடனே தடுத்து நிறுத்துமாறும்’ சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தமிழகத் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment