கொச்சி:கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி முதல் இந்தியாவில் தங்கியுள்ள இஸ்ரேல் தம்பதியினர் சந்தேகத்திற்குரிய வேளைகளில் ஈடுபட்டுள்ளதால் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர். ஷெனோர் சல்மான் மற்றும் அவரது மனைவி ஷெனாய் ஆகிய தம்பதியினர் கேரளா கொச்சியில் மார்கெட் மதிப்பை விட அதிக வாடகை அதாவது ரூபாய்.50,000 கொடுத்து தங்கியுள்ளனர்.
முன்னதாக மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் யூத ரப்பி மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவர் உட்பட 6 யூதர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் உளவு பிரிவு இந்தியாவில் தாக்குதல் நடத்த ரகசியமாக திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் அளித்திருந்தது என்றும் கேரள மாநில காவல்துறைதான் இந்த தம்பதியினரைக் கண்டுபிடித்துள்ளனர் என்றும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தம்பிதியினரை நாட்டை விட்டு வெளியேற்றும் முன்னர் இந்திய அதிகாரிகள் விசாரணை செய்வார்கள். மேலும் இந்த இஸ்ரேல் உளவாளிகளின் பண பரிவர்த்தனைக் குறித்து தங்களுக்கு முழு விவரம் தெரியவந்துள்ளதாகவும் மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று இஸ்ரேலின் உளவாளிகள் பதுங்கியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தம்பதியினர் குறித்து கேரள மாநில உளவுப் பிரிவு கூறியுள்ளதாவது இவர்கள் வசித்துவந்த வீட்டில் சிலர் அடிக்கடி வந்துபோவதும் அங்கு கூட்டங்கள் நடப்பதுமாக இருந்து வந்துள்ளது. மேலும் இந்த கூட்டங்கள் இரவு நீண்ட நேரம் வரையிலும் நடந்து வந்துள்ளது. மேலும் இவர்களை தினமும் தாங்கள் ஒருவருடமாக கண்காணித்து வந்ததாகவும் ஷெனோர் சல்மான் மற்றும் அவரது மனைவி ஷெனாய் ஆகியோருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஆணை வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இவர்களை விசாரணை செய்து எர்ணாக்குளம் மாவட்ட ஆட்சியர் பி.ஐ. ஷேக் பரீத் அவர்களுக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொச்சியில் ரூபாய் 50,000 என்ற மாத வாடகை மிகவும் அதிகம் என்றும் இதுவே இவர்கள் மீது சந்தேகம் வருவதற்கு முக்கிய காரணம் என்றும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment