டமாஸ்கஸ்:சிரியா பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் சிரியாவுக்கு சென்றுள்ளார். ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் மிகாயேல் ப்ராட்கோவும் லாவ்ரோவுடன் பஸ்ஸாருல் ஆஸாதை சந்திக்கிறார்.
பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலக கோரும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வீட்டோ செய்தன. இது பல நாடுகளில் பலத்தை எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதே வேளையில் லாவ்ரோவுடன் திங்கள் கிழமை உரையாடியதாக அரபு லீக் பொதுச்செயலாளர் நபீல் அல் அரபு கூறியுள்ளார். லாவ்ரோவின் புதிய ஃபார்முலா சிரியா பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் என நம்புவதாக நபீல் அல் அரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment