பெங்களூரு மங்களூர் மாவட்டத்தின் புத்தூர் தாலுகாவில் உப்பினங்கடியில் நடைபெற்ற ஹிந்து சமஜோத்சவ் என்னும் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் வகையில் பேசிய பேச்சுக்கு எதிராக இந்தியாவின் தேசிய மகளிர் முன்னணி (NWF) கடும் கண்டம் தெரிவித்துள்ளது.
மேலும் ஊடங்களுக்கு பேட்டி அளித்த அந்த அமைப்பானது, இஸ்லாமிய ஷரிஆ மற்றும் முஸ்லிம் பெண்களை அவமானபடுத்தியும் பேசியதற்கு எதிராக உப்பினங்கடி காவல் துறையில் பிணையல்லாத(Non-Bailable) வழக்கை section 153(A) மற்றும் 295(A) கீழ் பதிவு செய்துள்ளதாகவும், முஸ்லிம் பெண்களை அவமானபடுத்தி பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இந்த உரையின் மூலம், பெண்களை பற்றிய தவறான சிந்தனையை சங்க் பரிவார் வெளிபடுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படாததற்கு கண்டம் தெரிவித்தும், உடனடியாக அவரை கைது செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை காவல்துறை நிரூபிக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் முன்னணி(NWF) தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment