Wednesday, February 8, 2012

மதநல்லிணக்கத்தின் மறுமுகம்:ஹிந்து-முஸ்லிம் ஜோடிகளின் கிட்னி தானம்

kidney
கொச்சி:கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் ஹிந்து மதங்களைச் சேர்ந்த சகோதரிகள் ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு கிட்னி தானம் செய்துள்ளனர்.

தாநூரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவருக்கு வயது 51 மற்றும் பெருந்தலூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு வயது 37. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் தற்போது மறுவாழ்வு கிடைத்துள்ளது.

மஜீதின் மனைவி தாஹிரா(வயது 41) பாலகிருஷ்ணனுக்கும் மற்றும் பாலகிருஷ்ணனின் மனைவி பிந்து(வயது 34) மஜீதிற்க்கும் கிட்னி தானம் செய்துள்ளதே இதற்கு காரணமாகும்.

இவர்களுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பி.வி.எஸ். மருத்துவமனையில் நடந்துள்ளது. மேலும் இவர்களுக்கும் இவர்களுடைய கணவர்களுக்கும் ரத்தப் பிரிவு ஒன்றாக இல்லாததால் அவர்கள் தங்களின் கணவர்களுக்கு கிட்னி தானம் செய்ய முடியவில்லை. மேலும் ஒருவார இடைவெளியில் இருவருக்கும் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்துகொண்டு இருவரும் நலமாக உள்ளனர் என்றும் அவர்கள் மருத்துவ மனையிலிருந்து தங்களது இல்லங்களுக்கு சென்றுவிட்டனர் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza