குவைத் சிற்றி:ஈரான் மீதான தடை நீண்டால் அல்லது அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தடை தொடரும் சூழலில் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினாலோ அல்லது போர் உருவானாலோ நிலைமை மிகவும் சீர்குலையும். கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 160 டாலராக உயரும் என குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் உறுப்பினர் அலி அல் ஹஜேரி கூறினார்.
தற்போது எண்ணெய் விலை 100 டாலருக்கும் 105 டாலருக்கும் இடையே உள்ளது. உற்பத்தியாளர்களுக்கும், பயனீட்டாளர்களுக்கும் பாதகம் ஏற்படுத்தாத விலையாகும். இதை விட கச்சா எண்ணெய் விலை கடுமையா உயர்ந்தால் அது உலக பொருளாதார கட்டமைப்பை சீர்குலைத்துவிடும் என அலி அல் ஹஜேரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment