ஜித்தா:இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம்(IFF) ஜித்தா கிளை நடத்திய ஆரோக்கியமான வாழ்க்கையே! மகிழ்ச்சியான வாழ்கை! நிகழ்ச்சி ஷரபிய்யாஹ் நூர் பாலிகிளினிக்கில் கடந்த வியாழனன்று நடைபெற்றது.
ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை மருத்துவ ரீதியாக சகோதரர் அல்-அமான் பவர்பாயிண்ட் காட்சிகளின் (presentation) மூலம் தொகுத்தளித்தார். இதையடுத்து குர்-ஆன் மற்றும் ஹதீஸின் பார்வையில் சகோதரர் ஷேக் அப்துல்லா அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் ஆரோக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக யோகா மாஸ்டர் சிராஜ், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பேண வேண்டிய உடற்பயிற்சிகளை (ஆசனங்களை) சகோதரர் நௌஷாத் உதவியுடன் செய்து காட்டினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக வருகைபுரிந்த அனைவரின் உடல் எடை, உயரம் ஆகிய விவரங்கள் காணப்பட்டு, அவர்களின் உடல் நிலையைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நிகழ்ச்சியினை திருமறைக் குர்-ஆன் வசனங்களை ஓதி சகோதரர் அப்துல் கபூர் துவக்கி வைத்தார். சகோதரர் கே.ஐ.எம். ஷரீப் அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஐ.எப்.எப்.இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம்(IFF) ஆற்றி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை அதன் செயலாளர் சகோதரர் முஹம்மது அப்பாஸ் விவரித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment