தோஹா:ஃபலஸ்தீனில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு ஃபலஸ்தீன் அமைப்புகளான ஹமாஸிற்கும், ஃபத்ஹிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கத்தர் தலைநகரான தோஹாவில் ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் நேற்று நடத்திய சந்திப்பில் இம்முடிவு ஏற்பட்டது. தேர்தலுக்கு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள இடைக்கால அரசை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
கத்தர் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி ஹமாஸ்-ஃபத்ஹ் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். தேர்தல் தவிர இரு பிரிவினரும் முன்பு கையெழுத்திட்ட சமாதான ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது குறித்தும் அப்பாஸும், மிஷ்அலும் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஃபத்ஹ் செய்தி தொடர்பாளர் ஆஸம் அல் அஹ்மத் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment