புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலை வேளையில் முன்னாள் காங்.எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்டவர்களை கூட்டுப் படுகொலைச் செய்த வழக்கில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அஹ்மதாபாத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டியின் அறிக்கை சமர்ப்பிக்கபப்ட்டது. அறிக்கையின் விபரங்கள் வெளியிடவில்லை. ஆனால் மோடிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அந்த அறிக்கையில் கூறியிருப்பதாக சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோடிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்ற சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் கூறியுள்ளார். அறிக்கை வெளியான பிறகு எதனையும் கூறமுடியும் என அவர் கூறினார்.
2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையை தடுப்பதில் மோடி அரசு தோல்வியை தழுவிவிட்டதாக உயர்நீதிமன்றம் நேற்று தனது விமர்சனத்தை வெளியிட்டது. இந்நிலையில் எஸ்.ஐ.டியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இஹ்ஸான் ஜாஃப்ரியுடன் 60க்கும் அதிகமான நபர்கள் குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலையில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர். இவ்வழக்கில் மோடியிடம் விசாரணை நடத்தவேண்டும் என ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment