புனே:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து கஷ்மீர் குறித்த டாக்குமெண்டரியை திரையிட தடை விதித்ததை கண்டித்து மூத்த பத்திரிகையாளரும், முன்னாள் எம்.பியுமான குல்தீப் நய்யார் ஸிம்போசியஸ் இன்ஸ்ட்யூட் ஆஃப் மீடியா கம்யூனிகேசனின் ப்ரொஃபஸர் எமிரட்டஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடக்கவிருந்த ‘கஷ்மீரின் குரல்(Voice of kashmir)’ என்ற தலைப்பிலான 3 நாள் கருத்தரங்கில் பிரபல இயக்குநர் சஞ்சய் கக் இயக்கிய கஷ்மீர் குறித்த “ஜஷ்னே ஆஸாதி” என்ற டாக்குமெண்டரி திரைப்படத்தை திரையிட முடிவுச்செய்யப்பட்டது. ஆனால், ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி, எ.பி.வி.பி, பனூன் கஷ்மீர் ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் டாக்குமெண்டரியை திரையிட கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஸிம்போசியஸ் நிர்வாகிகள் டாக்குமெண்டரி திரையிடுவதை ரத்துச்செய்து கருத்தரங்கத்தை காலவரையற்று ஒத்திவைத்தனர்.
ஸிம்போசியம் நிர்வாகிகளின் இந்நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக தனது பதவியை ராஜினாமா செய்ததாக குல்தீப் நய்யார் நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸிம்போசியம் அதிகாரிகள் கூறுகையில், “பிரச்சனைகள் தொடர்பாக நய்யாருடன் பேசுவோம். அவருடைய உணர்வுகளை வேதனைப்படுத்தும் எண்ணமில்லை” என தெரிவித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment