டெல்அவீவ்:ஃபலஸ்தீனில் ஹமாஸும், ஃபத்ஹும் இணைந்து ஐக்கிய அரசை உருவாக்கியதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரசில் ஹமாஸிற்கு முக்கியத்துவம் அளித்தது இஸ்ரேலுக்கு கோபமடையச் செய்துள்ளது.
ஹமாஸுடன் சேர்ந்து ஐக்கிய அரசை உருவாக்குவதா இஸ்ரேலுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதா? என்பதை ஃபலஸ்தீன் அரசு தீர்மானிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஹமாஸுடன் ஐக்கியமும், இஸ்ரேலுடன் சமாதான பேச்சுவார்த்தையும் இணைந்து செல்ல முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஃபலஸ்தீனில் ஹமாஸும், ஃபத்ஹும் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய அரசுக்கு மஹ்மூத் அப்பாஸ் தலைமை வகிப்பார் என்ற செய்தி வெளியான பின்னர் இஸ்ரேலின் பதில் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கள் கிழமை கத்தர் ஆட்சியாளர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் முன்னிலையில் ஐக்கிய அரசு தொடர்பான ஒப்பந்தத்தில் மஹ்மூத் அப்பாஸும், காலித் மிஷ்அலும் கையெழுத்திட்டனர்.
ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு ஃபலஸ்தீன்-இஸ்ரேல் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment