அஹ்மதாபாத்:குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் மறுவிசாரணை கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதே மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறி குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அனத் தாவே இம்மனுவை தள்ளுபடிச் செய்தார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு மார்ச்26-ஆம் தேதி ஹரேன் பாண்டியா சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேர் மீதான கொலை குற்ற பிரிவை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்துச்செய்தது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் மறு விசாரணை நடத்தவேண்டும் என கோரி ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜாக்ரிதி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசும், சி.பி.ஐ -யும் அறிவித்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடிச் செய்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment