வாஷிங்டன்:ஆஃப்கானில் நிலைமைகள் சீரடைந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறுவதை அமெரிக்க மூத்த ராணுவ வீரர் மறுத்துள்ளார். லெஃப்டினண்ட் கர்னல் டேனியல் டேவிஸ், ராணுவத்தில் மேலதிகாரிகள் பரப்புரை செய்வது உண்மைக்கு வெகுதூரமானது என கூறியுள்ளார்.
ஒரு அமெரிக்க பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் டேவிஸ் இதனை தெரிவித்துள்ளார். ஆப்கானில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை வேண்டுமென்றே மூடி மறைத்துவிட்டு அமெரிக்க ராணுவம் பரப்புரைச் செய்கிறது. ஆப்கானில் நேரில் கண்ட காட்சிகள் உள்ளத்தை நடுங்கச் செய்வதாகும் என டேவிஸ் அக்கட்டுரையில் கூறியுள்ளார்.
அதேவேளையில், கட்டுரையில் டேவிஸ் கூறிய கருத்துக்களை பெண்டகன் மறுத்துள்ளது. டேவிஸ் கூறிய கருத்துக்கள் அவருடைய சொந்த அபிப்ராயமாகும். ஆப்கானில் அமெரிக்க ராணுவம் மிகச்சிறந்த பணியை ஆற்றிவருகிறது என பெண்டகனின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment