பெங்களூர்:பாரதீய கலாச்சாரம், பண்பாடு என வாய்க்கிழிய பேசும் சங்க்பரிவார கூட்டத்தின் ஒழுக்கச் சீரழிவு அடிக்கடி அம்பலமாகி வருகிறது. கலவரம் அல்லது இனப் படுகொலைகளை நிகழ்த்தும் வேளையில் சங்க்பரிவாரத்தின் பாலியல் வக்கிரத்தின் உச்சக்கட்ட கோர முகத்தை நாம் பார்த்திருக்கிறோம். அதைப் போலவே பொதுவாழ்விலும் அவர்களின் வேடம் அடிக்கடி கலைந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய சட்டப்பேரவை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தலைகுனிவான சம்பவம் கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்தது. இரண்டு பாஜக அமைச்சர்கள் சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே மொபைல் போனில் ஆபாசப்படம் பார்த்துள்ளனர்!
இதனால் ஆளும் பாஜக.விற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.கூட்டுறவு அமைச்சர் லஷ்மண் சவாடி, மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் சி.சி. பாட்டீல் ஆகிய இருவரும் மொபைலில் ஆபாசப் படம் பார்த்ததாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று வீடியோ ஒளிப்பதிவுடன் செய்தி வெளியிட்டது பரபரப்பாகியுள்ளது.
எதிர்கட்சித் தலைவரான சித்தராமையா இவர்கள் இருவரையும் அவைக்குள்ளேயே இனி அனுமதிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுவருடப் பிறப்பின் போது பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடி சங்க்பரிவார்களால் ஏற்றப்பட்டது குறித்த சூடான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்த அமைச்சர்கள் மொபைல் வீடியோவில் ஆபாசம் படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
இவர்களின் உறுப்பினர் பதவியை பறிக்கவேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் சதானந்தா கவுடா கூறுகையில், “நடந்தது உண்மையென்றால் அவைத் தலைவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். அவைத் தலைவர் போபையா, தான் இது குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
வடக்கு கர்நாடகா மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு அமைச்சர்களும் இந்த நிகழ்வு குறித்து பதில் கூறாமல் நழுவிவிட்டனர்.
முன்னாள் முதல்வரும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமி இது குறித்துக் கூறுஅகையில், “பாஜகவினர் மக்கள் இந்துக் கலாச்சாரத்தைப் பேணி காப்பது பற்றி வாய் கிழிய பேசி வருகிறது, ஆனால் அவர்கள் மனங்களிலும் செயல்களிலும் இவ்வளவு அசிங்கங்கள் இருக்கிறது பாருங்கள். கர்நாடகா சட்டசபை வரலாற்றிலேயே இச்சம்பவம் கறுத்த அத்தியாயமாகும்.” என்று கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment