அல்ஜியர்ஸ்:கொலை,பாலியல் வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்டு லிபியாவின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் மூத்த மகன் ஸைஃபுல் இஸ்லாமிற்கு நீதியான விசாரணையை உறுதிச்செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ஐ.சி.சி) தலையிடவேண்டும் என அவரது சகோதரி ஆயிஷா கத்தாஃபி கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு வழக்கறிஞர்களின் சேவையை தடுக்க லிபியா அரசு முயல்வதாகவும், இது விசாரணையை குறித்து சந்தேகத்தை எழுப்புவதாகவும் ஆயிஷா சுட்டிக்காட்டி ஐ.சி.சிக்கு மனு அளித்துள்ளார்.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் பேரில் ஸைஃபுல் இஸ்லாமின் மீது ஐ.சி.சியும் வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் தற்போதைய லிபிய அரசின் படையினர் ஸைஃபுல் இஸ்லாமை கைது செய்தனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment