Thursday, February 2, 2012

சிறுபான்மை கல்வி நிறுவன முதல்வர் நியமனத்தில் தலையிட நீதிமன்றம் மறுப்பு

கட்டாக்:கட்டாக்கில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்பான டயோசீசுக்கு உரிமையான ஸ்டீவர்ட் அறிவியல் கல்லூரியின் நிர்வாக விவகாரங்களில் தலையிட முடியாது என ஒரிஸ்ஸா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்லூரியின் மூத்த பேராசிரியரான எஸ்.கே. சாஹா என்பவர் முதல்வர் நியமனத்துக்குத் தடை கோரி தாக்கல் செய்த மனு மீது, நீதிபதிகள் எல். மொஹபத்ரா, பி.கே. படேல் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza