Thursday, February 2, 2012

ஆர்மீனியா இனப்படுகொலை: சட்டத்திற்கு பிரான்சு எம்.பிக்கள் எதிர்ப்பு

பாரிஸ்:உதுமானியர்கள் துருக்கியை ஆண்ட காலக்கட்டத்தில் நடந்த ஆர்மீனியா கூட்டுப் படுகொலையை மறுப்பது சட்டவிரோதம் என கூறும் சட்டத்தை ரத்துச்செய்ய வேண்டும் என பிரான்சு நாட்டின் பாராளுமன்ற எம்.பிக்கள் அந்நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனவரி 23-ஆம் தேதி ஆர்மீனியா படுகொலையை மறுப்பது சட்டவிரோதம் என கூறும் மசோதாவிற்கு பிரான்சு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. இச்சட்டத்திற்கு துருக்கி கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. மசோதாவிற்கு அங்கீகாரம் அளித்த பிரான்சு நாட்டின் பாராளுமன்ற நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டுடன் பொருளாதார, ராணுவ, அரசியல் உறவுகளை துருக்கி துண்டித்தது.

இதனிடையே, பிரான்சு அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த எழுபதுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இச்சட்டத்தை ரத்துச்செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எம்.பிக்களின் கோரிக்கையை விசாரணைக்கு எடுத்துள்ள உச்சநீதிமன்றம் இம்மாதம் இறுதியில் தீர்ப்பு அளிக்கும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza