ஜெருசலம்:நகரங்களில் குடி நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்காக இந்தியா இஸ்ரேலுடன் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பின் தொழில்நுட்பத்தை இஸ்ரேல், இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும். மத்திய நகர வளர்ச்சி துறை அமைச்சர் கமல்நாத் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் செல்லும் வேளையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்.
இந்தியா-இஸ்ரேலின் தூதரக உறவின் 20-வது வருடம் இவ்வாண்டு நிறைவடைவதையொட்டி இரு நாடுகளும் ஏராளமான பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போவதாக செய்திகள் கூறுகின்றன.
மத்திய கிழக்கில் பயங்கரவாத நாடாக திகழும் இஸ்ரேலுடன் இந்தியா அண்மைக் காலமாக மிகவும் நெருக்கமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment