Thursday, February 2, 2012

சிரியா:அரசியல் தீர்வு தேவை – இந்தியா

ஐ.நா:சிரியாவில் மோதலை முடிவுக்கு கொண்டுவர அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் மட்டுமே ஒரே வழி என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. பலத்தை பிரயோகித்து சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதை இந்தியா எதிர்க்கிறது.

அரபு லீக்குடன் அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி கூறினார். சிரியாவின் பிரச்சனையை குறித்து விவாதிக்க நடந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றினார் அவர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza