காஜிபூர்:இடஒதுக்கீடு வழங்குவதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தைப் பிரிப்பதற்கு காங்கிரஸ் முயற்சிப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி குற்றஞ்சாட்டினார்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மாயாவதி, காஜிபூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
“முஸ்லிம்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் ஒருபோதும் விரும்பியது கிடையாது. இடஒதுக்கீடு என்ற பெயரில் அவர்களைத் தூண்டிவிட்டு, தவறாக வழி நடத்த முயற்சிக்கிறது. உண்மையில் முஸ்லிம்களை வாங்கு வங்கியாக மட்டுமே அந்தக் கட்சி பார்க்கிறது. பிரித்தாள்வதே அதன் கொள்கை” என்றார் மாயாவதி.
பொருளாதார நிலையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கிறது. முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்கெனவே அரசு தொடங்கியிருக்கிறது. அதேபோல் உயர் ஜாதி ஏழைகளுக்கும் திட்டங்களை வகுத்திருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment