Thursday, February 9, 2012

கான்ஸ்டபிளுக்கு மனித தன்மையற்ற தண்டனை – ஐ.பி.எஸ் அதிகாரி மீது விசாரணை

புதுடெல்லி:பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் கான்ஸ்டபிள் ஒருவரை தலைகீழாக நடக்க வைத்த கேரளாவைச் சார்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் சல்யூட் செய்யாத கான்ஸ்டபிளுக்கு தண்டனையாக ஸைஜு பி குருவிளா என்ற ஐ.பி.எஸ் அதிகாரி அவரை பிடித்து கீழே தள்ளி தலைகீழாக நடந்துவருமாறு கட்டாயப்படுத்தினார் என வழக்கறிஞர் ஆர்.கே.ஷைனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இவ்வழக்கில் பதில் அளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் ஐ.பி.எஸ் அதிகாரி ஸைஜுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தையும், சேவைகளையும் களங்கப்படுத்தினார் என குற்றம் சாட்டி ஸைஜு மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தைக் குறித்து இம்மாதம் 15-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸைஜு மீதான குற்றச்சாட்டை விசாரிக்க கூடுதல் கமிஷனர் சந்தீப் கோயலிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் ராஜன் பகத்சிங் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ஸைஜு மற்றும் கான்ஸ்டபிளிடம் வாக்குமூலம் சேகரிக்கப்படும் என அவர் கூறினார். ஸைஜுவினால் தண்டனைக்கு ஆளான கான்ஸ்டபிள் குமார் சிகிட்சையில் உள்ளார். குமாருடன் பணியாற்றும் நபர் கூறுகையில், அவரது தாயார் இச்சம்பத்தை கேள்வி பட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்பாக தலைகீழாக நடந்து வர கட்டாயப்படுத்தியது அவரை மிகவும் அவமானத்தில் ஆழ்த்தியது என்றும் கூறுகிறார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza