மொகாதிஷு:சோமாலியா தலைநகரான மொகாதிஷுவில் கார்குண்டு வெடித்ததில் 11 பேர் மரணமடைந்தனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
அதிபரின் மாளிகைக்கு அருகில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே கார் குண்டு வெடித்துள்ளது. சோமாலியா சட்ட அவை உறுப்பினர்களும், உயர்மட்ட அரசு அதிகாரிகளும் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து செல்வர்.
குண்டுகளை நிரப்பிய காருடன் ஹோட்டலில் நுழைந்து வெடிக்கச் செய்வதே அக்காரை ஓட்டிய நபரின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளையில், தாக்குதலின் பின்னணியில் அல் ஷபாப் இயக்கம் செயல்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த அமைப்புக்கு அல்காயிதாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2001-ஆம் ஆண்டு இதே ஹோட்டலில் நடந்த தாக்குதலில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment