வாஷிங்டன்:ஈரான் மீது ராணுவ தாக்குதலுக்கு தயாராகி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலும், கனடாவிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான போர் எதிர்ப்பு ஆர்வலர்களின் தலைமையில் இரு நாடுகளின் முக்கிய நகரங்களில் பேரணிகள் நடந்தன.
அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி, நியூயார்க், போஸ்டன், ஷிக்காகோ, ஃபிலடல்பியா, சான் பிரான்சிஸ்கோ உள்பட அறுபது நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. நியூயார்க்கில் இஸ்ரேல் தூதரகம், அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் ஆகியவற்றிற்கு முன்னால் திரண்ட மக்கள் “No war, no sanctions, no intervention, no assassinations,” (போரும் வேண்டாம், பொருளாதார தடைகளும் வேண்டாம், தலையீடுகளும் வேண்டாம், கொலைகளும் வேண்டாம்” என கோரும் பேனர்களை கைகளில் ஏந்தியிருந்தனர்.
கனடாவில் முக்கிய நகரங்களான வான்கோவர், கால்கரி ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடந்தன. ஈரானின் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான சூழலில் போர் எதிர்ப்பு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதைப்போன்ற போராட்டங்கள் பிரிட்டன், அயர்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment