புதுடெல்லி:2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிரியாகச் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் காலவரிசை:2011
ஆகஸ்ட் 23: 2ஜி வழக்கில் ப. சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சுவாமி மனு தாக்கல் செய்தார்.
செப்டம்பர் 15: 2ஜி வழக்கில் ப. சிதம்பரத்தை எதிரியாகச் சேர்க்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுவாமி மனு தாக்கல் செய்தார்.
செப்டம்பர் 22: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு இல்லை. தொலைத் தொடர்புத்துறை மீதுதான் தவறு என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
அக்டோபர் 10: ப.சிதம்பரத்துக்கு எதிராக சுவாமி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நவம்பர் 15: ப.சிதம்பரத்துக்கு எதிராக முறையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக சுவாமி மீது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
டிசம்பர் 8: தனிநபர் புகாரின் அடிப்படையில் சுவாமி தாக்கல் செய்த மனு மீது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
2012
ஜனவரி 7: ப.சிதம்பரத்துக்கு எதிராக தன்வசம் இருந்த ஆவணங்களை நீதிமன்ற உத்தரவுப்படி, சுவாமி சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வாதாடினார். மத்திய நிதியமைச்சகத்தில் இணைச் செயலராகப் பணியாற்றிய சிந்துஸ்ரீ குல்லர், சிபிஐ இணை இயக்குநர் எச்.சி.அவஸ்தி ஆகியோரைத் தான் விசாரிக்க வேண்டும் என அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சுவாமி.
ஜனவரி 21: சிபிஐ சிறப்பு நீதிமன்ற விசாரணையில் சிதம்பரத்துக்கு எதிரானதாகக் கருதப்பட்ட ஆதாரங்களை வைத்து வாதிட்டார் சுவாமி. பின்னர் வழக்கின் உத்தரவு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிப்ரவரி 2: ப.சிதம்பரத்தை விசாரிக்கக் கோரி சுவாமி தொடர்ந்த வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றமே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிப்ரவரி 4: 2ஜி வழக்கில் ப. சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. இது தொடர்பாக சுவாமி தாக்கல் செய்த பிரதான மனுவை நீதிபதி ஓ.பி.சைனி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

0 கருத்துரைகள்:
Post a Comment