Monday, February 6, 2012

கோயில் திருவிழா அலுவலகத்திற்கு தீவைத்து கலவரத்தை தூண்ட முயன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்

சாவக்காடு(கேரளா):கேரள மாநிலம் வடக்கே காடு கவுக்கானப்பட்டி என்ற இடத்தில் கோயில் வளாகத்தில் திருவிழாவையொட்டி கட்டப்பட்டிருந்த கமிட்டி அலுவலகத்திற்கு தீவைத்து கொளுத்த முயன்ற அப்பகுதியைச் சார்ந்த ஸபீஷ், பஜீஷ் ஆகிய இரு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்துள்ளது.

கோயில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த கமிட்டி அலுவலகத்திற்கு தீவைத்து அதன் மூலம் அப்பகுதியில் வகுப்பு கலவரத்தை தூண்டி முஸ்லிம்கள் நடத்தி நபி பிறந்த நாள் விழாவை சீர்குலைக்கவும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட சதித்திட்டத்தை போலீஸார் சமயோஜிதமாக செயல்பட்டு முறியடித்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு கோயில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த திருவிழா கமிட்டி அலுவலகத்திற்கு தீவைத்து கலவரத்தை தூண்ட முயற்சி நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே கர்நாடகா மாவட்டம் பிஜாப்பூரில் பாக்.கொடியை ஏற்றிவிட்டு அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு கலவரத்தை தூண்ட முயன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம் அண்மையில் போலீசாரால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza