பெங்களூர்:சட்டவிரோத நிலவிடுப்பு வழக்கில் மார்ச்-3-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது மகன்களுக்கு லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பெங்களூர் ஊரக மாவட்டம், ராச்சேனஹள்ளியில் அரசு நிலத்தை சட்ட விரோதமாக விடுவித்து உத்தரவிட்டதாகவும், பண ஆதாயத்திற்காக பொதுச் சாலையை வையலிகாவல் வீட்டுவசதி சங்கத்திற்குச் சொந்தமான நிலத்துடன் இணைத்ததாகவும் எடியூரப்பா மீது வழக்குரைஞர் சிராஜின் பாஷா புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இவ்வழக்கில், சனிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அடுத்த விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.கே.சுதீந்திரராவ், எடியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோஹன்குமார், முன்னாள் அமைச்சர் கிருஷ்ணைய்யா ஷெட்டி மற்றும் தவளகிரி பிரபர்டீஸ் நிறுவன இயக்குநர்கள் அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

0 கருத்துரைகள்:
Post a Comment