புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்க்க தேவையில்லை என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால் இனி அவரை குறித்து யூகத்தின் அடிப்படையில் கருத்து வெளியிடுவதை எதிர்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுத்தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
ப.சிதம்பரம் தொடர்பாக நீதிமன்றம் தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதனால் இத்துடன் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சிதம்பரத்தை இணைத்துப் பேசுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசு அவமானப்படவோ தார்மீக பொறுப்பை ஏற்பதோ தேவையற்றது. ஏற்கெனவே, 2ஜி அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில், பிரதமருக்கும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி விட்டது. அதைத்தான் சிபிஐ நீதிமன்றமும் குறிப்பிட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை தொடர்பாக ஆய்வு செய்யும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில், நீதிமன்றத் தீர்ப்பு மிகச் சரியாக வழங்கப்பட்டு விட்டது என்று என்னால் கூற முடியும் என்றார் மணீஷ் திவாரி.


0 கருத்துரைகள்:
Post a Comment