Thursday, February 2, 2012

ரத யாத்திரை:உமாபாரதிக்கு அனுமதி மறுப்பு

உமாபாரதி
லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி ரத யாத்திரை செல்ல பா.ஜ.கவின் உமாபாரதி தீர்மானித்தார். ஆனால், தேர்தல் கமிஷன் உமாபாரதிக்கு ரத யாத்திரைக்கான அனுமதியை மறுத்துள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறுகையில், ரத யாத்திரை நடத்த பாஜகவினர் உறுதிச் சான்றிதழோஅல்லது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெறப்படும் சான்றிதழோ சமர்பிக்கவில்லை. இந்த இரண்டில் ஏதாவது ஒரு சான்றிதழை சமர்பித்தால் ரத யாத்திரை நடத்த அனுமதி அளிக்கப்படும். இது குறித்து அந்த கட்சிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza