பழங்குடி பெண்களை அரைநிர்வாண நடனமாட வைத்த போலீஸ் அதிகாரிகள்: மேலும் 2 வீடியோக்கள்
6 Feb 2012
லண்டன்:அந்தமானில் பழங்குடி இனத்தைச் சார்ந்த பெண்களை அரை நிர்வாண நடனம் ஆடச் செய்ததில் போலீஸ் அதிகாரிகளின் பங்கினை வெளிப்படுத்தும் இரண்டு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இரண்டு க்ளிப்பிங்கிலும் போலீஸ் அதிகாரிகள் காணப்படுகின்றனர். வீடியோ படம் பிடித்த தேதி தெளிவாக இல்லை. இக்காட்சி மொபைல் ஃபோன் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய போலீஸ் அதிகாரிகளுக்கு முன்பாக அரை நிர்வாணம் ஆடும் காட்சிகள் அடங்கிய வீடியோ 3 நிமிடம் பத்தொன்பது வினாடிகள் ஓடுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு முன்பாக நடனம் ஆடும் இளம் பெண்களின் அருகே போலீஸ் அதிகாரி நிற்பது இரண்டாவது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
உணவு தருவதாக வாக்குறுதியளித்து பழங்குடியின பெண்களை சுற்றுலா பயணிகளுக்கு முன்னால் நடனம் ஆட வைத்த செய்தி வெளிநாட்டு பத்திரிகையொன்றில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

0 கருத்துரைகள்:
Post a Comment