பெங்களூர்:சர்ச்சைக்குரிய எஸ் பாண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) நேற்று வெளியிட்ட விசாரணை அறிக்கை ஒருதலைபட்சமானது என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் கூறியுள்ளார்.
தனிப்பட்ட விருப்பங்கள் இந்த அறிக்கையின் பின்னணியில் உள்ளன. ஒப்பந்தத்தை குறித்து ஆராயமல் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு தொடர்பான அனைத்து விசாரணை அறிக்கைகளையும் இஸ்ரோ வெளியிட வேண்டும் என மாதவன்நாயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ், கடந்த 2005-ம் ஆண்டு தனது எஸ்.பாண்ட் அலைகற்றையினை தேவாஸ் நிறுவனத்திற்கு வெறும் ரூ.1000கோடிக்கு விற்றது. இந்த ஒப்பந்தத்தினால் அரசுக்கு இதில் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை குழு (ஜி.சி.ஏ.) கூறியிருந்து.
இது தொடர்பாக முன்னாள் லஞ்சஒழிப்பு கமிஷனர் பிரதீயூஸ் சின்ஹா தலைமையிலான குழுவை கடந்த (2011)ஆண்டு மே மாதம் பிரதமர் நியமித்தார்.இக்குழு தனது அறிக்கையில் அப்போதைய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மீது புகார் எழுந்தது. இதனால் அவர்கள் அரசு பதவி பெற தடை விதிக்கப்பட்டது.
பின்னர் இஸ்ரோவின் சார்பில் முன்னாள் அமைச்சரவை செயலர் பி.கே.சதூர்வேதி தலைமையில், இஸ்ரோ விஞ்ஞானி ரோதம் நரசிம்மா உள்ளிட்டோர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் விசாரணை அறிக்கை,(சனிக்கிழமை)இரவு வெளியானது, இது தொடர்பாக இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் -தேவாஸ் இடையேயான ஒப்பந்த நடைமுறையில் தவறு உள்ளது எனவும், மாதவன் நாயர் அரசு பதவி வகிக்க எப்படி தடை செய்யலாம், அலைகற்றை ஒதுக்கீ்ட்டை எப்படி பயங்கரவாதத்துடன் ஒப்பிட முடியும் எனவும், தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் நடைமுறை பின்பற்றவில்லை. இதனால் மாதவன் நாயர், பாஸ்கரன் நாராயணன், ஸ்ரீதரமூர்த்தி, சங்கரன் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment