Wednesday, February 8, 2012

சர்கோஸியின் ஆடம்பரம்: 121 கார்கள், தினசரி உணவு செலவு 10 ஆயிரம் பவுண்ட்

Sarkozy splurges 10000 a day on food, owns 121 cars

லண்டன்:பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் மாளிகையில் 121 கார்கள் உள்ளன. உணவுக்காக தினமும் 10 ஆயிரம் பவுண்ட் செலவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

L’argent de l’État (Money from the State) என்ற நூலில் சோசியலிஸ்ட் எம்.பி Rene Dosiere இதனை தெரிவித்துள்ளார்.

பொது கருவூலத்தில் உள்ள பணத்தை தனிப்பட்ட அவசியத்திற்காக செலவிடுவதில் சற்றும் தயங்காத சர்கோசி உக்ரைனில் தங்கியுள்ள தனது மகன் பியரியை காண்பதற்கு அரசு பணத்தில் தனி விமானம் மூலமாக சென்றார் என்றும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான விமான பயணம் சர்கோஸியின் பலகீனமாக இந்நூல் விமர்சிக்கிறது. பிரான்சு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேளையில், நாட்டின் அதிபர் கண்ணை மூடிக்கொண்டு பொது சொத்தை செலவழிக்கிறார் என Rene Dosiere சுட்டிக்காட்டுகிறார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza