skip to main |
skip to sidebar
பா.ம.க உள்ளிட்ட கட்சிகளில் மாநில அளவில் பொறுப்பு வகித்தவரும், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனறுமான திரு. பசுபதி பாண்டியன் அவர்கள் நேற்று சில சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திரு.பசுபதி பாண்டியன் அவர்கள் தலித் சமூகத்திற்காக மாத்திரமன்றி ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒற்றுமைக்கும், உரிமைகளுக்கும் குரல் கொடுத்து வந்தவர். ஏற்கனவே பலமுறை சமூக விரோதிகளின் கொலை முயற்சிக்கு இலக்காகியிருந்தும், அவரது மனைவி அந்த கொலை முயற்சியில் படுகொலை செய்யப்பட்டிருந்தும் காவல் துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஒரு சமூகத்தின் முக்கிய பிரமுகர், ஒரு அமைப்பின் தலைவர் என்ற முறையில் அவருக்கு முறையான பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். இதைச் செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது அமைப்பினைச் சார்ந்தவர்களுக்கும், அவரது சமூக மக்களுக்கும் எஸ்.டி.பி.ஐ யின் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment