டெல்லி:முஸ்லீம்களுக்கெதிரான கட்டுரை விவகாரத்தில் ஜனவரி 30ம் தேதி வரை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை கைது செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சுப்பிரமணியம் சுவாமிக்கெதிராக டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ததையடுத்து, முன் ஜாமீன் கோரி அவர் நீதிமன்றத்தை அணுகினார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எல்.மெஹ்தா, வரும் ஜனவரி 30ம் தேதிவரை சுவாமியை கைது செய்யக்கூடாது என உத்தவிட்டார்.
முன்னதாக, ‘இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி’ என்ற தலைப்பில் டி.என்.ஏ. பத்திரிகையில் சுவாமி கட்டுரை ஒன்றை வெளியிட்டார். மத வெறியை தூண்டிய அக்கட்டுரை, பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment