வாஷிங்டன்:பொருளாதார சமத்துவம் கோரியும், கார்ப்பரேட் குத்தகை காரர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்திவரும் ‘வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ இயக்க எதிர்ப்பாளர்களை பலப்பிரயோகம் மூலம் அகற்ற அமெரிக்க போலீஸ் முடிவுச் செய்துள்ளது.
வாஷிங்டனில் போராட்டம் மையங்களாக கருதப்படும் மக்ஃபேர்ல்சன் சதுக்கம், ஃப்ரீடம் ப்ளாஸா ஆகிய இடங்களில் போராட்ட எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த போலீஸ் திட்டமிட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் எதிர்ப்பாளர்கள் இச்சட்டத்திற்கு கட்டுப்படமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, துறைமுக நகரமான ஆக்லண்டில் போலீசார் கைது செய்த போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை போராட்டம் ஆக்லண்டில் வலுவடைந்தது. இங்கு எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் கண்ணீர் புகை வீசி, கிரேனட் தாக்குதலை நடத்தியது. போலீஸ் நடவடிக்கையை கண்டித்து எதிர்ப்பாளர்கள் கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment