மும்பை:அத்னான் பட்ரவாலா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரை மும்பை நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளது. அத்னானின் கூட்டாளிகளான சுஜித் நாயர், அமித் கவுசல், ஆயுஷ் பட், ராஜீவ் தாரியா ஆகியோரை நீதிமன்றம் விடுவித்தது. இவர்கள் குற்றவாளிகள் என்பதை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வியை தழுவியதை தொடர்ந்து நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது.
மும்பையின் பிரபல பில்டரான அஸ்லம் பட்ரவாலாவின் மகன் அத்னான் பட்ரவாலா 2007 ஆகஸ்ட் 16-ஆம் தேதி கொல்லப்பட்டார். அவருக்கு வயது 16 ஆகும். அத்னானின் கூட்டாளிகள்தாம் இதன் பின்னணியில் செயல்பட்டனர் என போலீஸ் கண்டுபிடித்தது. அத்னானை கடத்திச் சென்ற இவர்கள் இரண்டு கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டனர் என அத்னானின் தந்தை போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் அத்னான் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக ஐந்து பேரை போலீஸ் கைது செய்தது. இதில் ஒருவர் பருவ வயதை அடையாததால் ஜுவைனல் சிறை(சிறுவர் சீர்திருத்தப்பள்ளி)க்கு அனுப்பப்பட்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment