Tuesday, January 31, 2012

பங்களாதேஷ்:ராணுவ புரட்சிக் குறித்து கிளம்பியுள்ள சந்தேகங்கள்

Bangladesh
டாக்கா:அவாமி லீக் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவினர் முயற்சித்தார்கள் என்ற செய்தியைக் குறித்து ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. பிரதமர் ஹஸீனா வாஜிதின் முக்கிய ஆலோசகரான கவுஸர் ரிஸ்வி என்பவர்தாம், வெளிநாட்டில் புகலிடம் தேடியுள்ள இஷ்ராக் அஹ்மதின் தலைமையில் 14 ராணுவ அதிகாரிகள் நடத்திய ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை ராணுவம் முறியடித்தது குறித்த செய்தியை ஊடகங்களுக்கு அளித்தார்.

சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் லெஃப்.கர்னல் இஹ்ஸான் யூசுஃப், மேஜர் ஸாக்கிர் ஆகியோரை கைது செய்துள்ளதாகவும் ரிஸ்வி கூறினார்.

இதுக்குறித்து குற்றம் சாட்டப்பட்ட இஷ்ராக் அஹ்மத் கூறியது:

 ராணுவத்தில் அவாமி லீக்கி எதிர்ப்பவர்களை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமே ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு. பங்களாதேஷை ஒரு ஏகாதிபத்திய நாடாக மாற்ற ஹஸீனா வாஜித் முயற்சிக்கிறார். பங்களாதேஷின் உளவுத்துறை தலைமையகத்தில் பணியாற்றும் ஒரு வெளிநாட்டு ஏஜன்சியின் செயல்பாடுகள் பங்களாதேஷின் எதிர்காலத்தை அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் அவாமிலீக் எதிர்ப்பு தலைவர்களை கடத்திச் செல்கின்றனர். தாடி வைத்தவர்கள் அனைவரையும் சந்தேகத்தோடு கண்காணிக்கின்றனர் என்று இஷ்ராக் அஹ்மத் கூறியுள்ளார்.

இஷ்ராக் பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். செய்தியாளர்களோ, பொது மக்களோ ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை ஒன்று காணவில்லை. அவாமி லீக், ராணுவத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை வலுவாக்குவதற்கான திட்டம் தான் இச்செய்தி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

2013-ஆம் ஆண்டு பொது தேர்தலை குறிவைத்து ஹஸீனா வாஜித் காய்களை நகர்த்துவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அவாமி லீக்கின் மக்கள் ஆதரவு பெருமளவு குறைந்துவிட்டதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza