Tuesday, January 31, 2012

அமெரிக்கா-தாலிபான்: பேச்சுவார்த்தையில் பின்னடைவு

தோஹா:கத்தரில் அமெரிக்க அதிகாரிகளுக்கும் தாலிபான் போராளிகளுக்கும் இடையே துவங்கிய பேச்சுவார்த்தையின் முதல் தினத்திலேயே பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை ஒப்படைப்பது, ஆஃப்கானில் போரை நிறுத்துவது போன்ற விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட போதிலும் கைதிகளை விடுதலை செய்யும் முன்பு ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை தாலிபான் நிராகரித்துவிட்டது.

2009-ஆம் ஆண்டு தாலிபான் ஆஃப்கானின் பாக்டிகா மாகாணத்தில் இருந்து கைது செய்த அமெரிக்க ராணுவ வீரர் பாவ் பர்க்தஹலை விடுவிக்கவேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. குவாண்டனாமோ கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மட்டுமே கத்தரில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை அல்ல என்றும் தாலிபானின் மவ்லவி கலாமுத்தீன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza