ப்யோங்கியாங்:தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா நடத்தவிருக்கும் ராணுவ ஒத்திகை வடகொரியாவிற்கு விடுக்கப்படும் சவால் என அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.
கொரியா துணைக் கண்டத்தில் அமைதியான சூழலை சீர்குலைப்பதன் மூலம் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பை நடத்த அமெரிக்கா துணிகிறது என வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
பிப்ரவரி 27, மார்ச் 9 ஆகிய தினங்களில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகையை நடத்துகின்றன. தென்கொரியாவின் 20 ஆயிரம் படை வீரர்களும், அமெரிக்காவின் 2,100 படை வீரர்களும் ராணுவ ஒத்திகையில் கலந்துக்கொள்வர்.
கிம் ஜோங் இல்லின் மரணத்தால் துக்கம் அனுஷ்டிக்கும் வடகொரியாவை கொந்தளிப்பில் ஆழ்த்த அமெரிக்கா துணிந்துள்ளது என வடகொரியா கூறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளும் பிராந்தியத்தில் வருடந்தோறும் நடத்தி வரும் கூட்டு ராணுவ ஒத்திகைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது வடகொரியா.
0 கருத்துரைகள்:
Post a Comment