Saturday, January 28, 2012

பகவத் கீதை வாழும் நெறி: ம.பி உயர்நீதிமன்றத்தின் மதவாத தீர்ப்பு

mphc
ஜபல்பூர்(ம.பி):இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையை மறந்துவிட்டு தீர்ப்பு கூறுவது நீதிமன்றங்களின் வாடிக்கையாக மாறிவிட்டது.

பகவத் கீதை மத நூல் அல்ல; அது வாழும் நெறி எனவும் சமூக நீதி காக்கும் நூல் எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இவ்வாறு கூறியுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பகவத் கீதை கற்பிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்தது. இதை எதிர்த்து கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் மக்கள் தொடர்பாளர் ஆனந்த் முட்டங்கல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பகவத் கீதை ஒரு மத நூல் என்று வாதிட்ட அவர், பள்ளிகளில் பிற மத நூல்களும் கற்பிக்கப்பட வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார். அவர் சார்பாக ராஜேஷ் சந்திரா என்ற வழக்குரைஞர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிபதிகள் அஜித் சிங், சஞ்சய் யாதவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

இதற்கு முன்றைய விசாரணையின்போது மனுதாரரின் வழக்குரைஞரை பகவத் கீதை படித்துவிட்டு வருமாறு கூறிய நீதிபதிகள், அதற்காக அவருக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் அளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது அவர் கீதையை வாசித்தாரா என்று நீதிபதிகள் கேட்டனர்.

தாம் பகவத் கீதையைப் படித்ததாகவும் ஆனால் அதை முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் ராஜேஷ் சந்திரா தெரிவித்தார். (ஒரு ஹிந்துவால் அதுவும் ஒரு வழக்குரைஞரால் கூட புரிய முடியாத நூல் எவ்வாறு வாழ்க்கை நெறியாக முடியும்? – இது கூட நீதிமன்றத்திற்கு புரியவில்லை)

இதையடுத்து, பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல; அது ஒரு வாழும் நெறி என்று நீதிபதிகள் கூறினர். அது நன்னெறியை போதிக்கிறது. சமூக நீதியைக் காப்பதன் முக்கியத்துவத்தை கீதை வலியுறுத்துகிறது என்று தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

ம.பி உயர்நீதிமன்றத்தின் நகைப்பிற்கிடமான இத்தீர்ப்பு எவ்வளவு தூரம் இந்திய நீதிமன்றங்கள் பாசிச மயமாகி வருகின்றன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

1 கருத்துரைகள்:

Anonymous said...

I just came across your blog and found it be really helpful in my evaluation.Hey buddy that was a gud post lot of quality stuff and essential information
Ford Fusion AC Compressor

Post a Comment

Dua For Gaza