Saturday, January 28, 2012

அணுசக்தி:பேச்சுவார்த்தைக்கு தயார் – அஹ்மத் நஜாத்

நஜாத்

டெஹ்ரான்:அணுசக்தி தொடர்பாக உலகின் வல்லரசு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டி சமாதானத்திற்கான சாத்தியக்கூறுகளின் வாசல்களை அடைக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாக நஜாத் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஒரு வருடத்திற்கு முன்பே ஈரான் பேச்சுவார்த்தையை துவக்கியிருந்தது. கடைசியாக 2011 ஜனவரி மாதம் துருக்கியில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது.

மேற்கத்திய நாடுகள் வலுப்படுத்தி வரும் தடை ஈரானை பாதிக்காது என நஜாத் கூறினார். கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை தொடருகின்றன. எண்ணெய் சந்தையில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வாபஸ் பெற்றாலும் ஈரானை அழித்துவிட முடியாது என நஜாத் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza