புதுடெல்லி:பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிக்க முயன்ற நபரை அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.
கறுப்பு பணத்திற்கு எதிராக டெல்லி கான்ஸ்டிடியூஷனல் க்ளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ராம்தேவ். அப்பொழுது ஒருவர் ராம்தேவ் மீது கறுப்பு மையை தெளிக்க முயன்றார். இதையடுத்து ராம்தேவின் ஆதரவாளர்கள் அந்த நபரைப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வாயில் இருந்து ரத்தம் சொட்டியது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என ராம்தேவ் அறிவித்திருந்தார்.
கறுப்பு மை வீச்சு குறித்து கூறியதாவது: இத்தகைய சம்பவங்களுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன். ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான எனது போராட்டம் தொடரும். மக்களின் நல்வாழ்வுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன் என்றார் அவர்.
அதேவேளையில், இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ராம்தேவின் மீது கறுப்பு மை தெளிக்க முயன்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஷித் ஆல்வி கூறினார்.
கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுகிறேன் என சவடால் விடும் ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாதத்தின் கைப்பொம்மையான பாபா ராம்தேவ் யோகா, தியானம் மூலம் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான சொத்துக்களை சொந்தமாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment