Saturday, January 14, 2012

கோத்ரா:இறந்த உடல்களை கொண்டுவர தீர்மானித்தது மோடியாக இருக்கலாம் – ஸதாஃபியா வாக்குமூலம்

zadafia
அஹ்மதாபாத்:கோத்ரா ரெயில் தீவைப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அஹ்மதாபாத்திற்கு கொண்டுவர முதல்வர் மோடி தீர்மானித்திருக்கலாம் என குஜராத் முன்னாள் அமைச்சர் கோர்டன் ஸதாஃபியா நானாவதி கமிஷன் முன்னால் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

2002 பிப்ரவரி 28-ஆம் தேதி டி.ஜி.பி அலுவலகத்திற்கு செல்ல முன்னாள் அமைச்சர் ஐ.கே.ஜடேஜாவுக்கு நான் ஒருபோதும் உத்தரவிடவில்லை என ஸதாஃபியா கூறினார். நகரத்தில் கலவர சூழல் ஏற்பட்டது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என ஸதாஃபியா கூறுவது பொய் என மோடியால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிசஞ்சீவ் பட் கூறியிருந்தார்.

ஆனால், இதனை மறுத்துள்ளார் ஸதாஃபியா. மோடியும், முன்னாள் அமைச்சர் அசோக் பட்டும் சேர்ந்து கோத்ரா ரெயில் எரிப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அஹ்மதாபாத்திற்கு கொண்டுவர தீர்மானித்திருக்கலாம் என ஸதாஃபியா கூறினார். கோத்ரா சம்பவத்தை தடுப்பதற்கு ஏன் அரசால் இயலவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ’அச்சம்பவம் குறித்து முன்கூட்டியே அறியமுடியவில்லை’ என கூறினார் ஸதாஃபியா.

பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜரான முகுல் சின்ஹாவின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஸதாஃபியா இவ்வாறு பதிலளித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza