Monday, January 16, 2012

இந்தியாவில் கள்ள நோட்டுக்கள் விநியோகம் 400 சதவீதம் அதிகரிப்பு

கள்ளநோட்டுக்கள்

புதுடெல்லி:இந்தியாவில் கள்ள நோட்டுக்கள் விநியோகம் 400 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

நிதியியல் ரகசிய புலனாய்வு பிரிவு(Financial Investigation Unit-FIU)  தயார் செய்த கடந்த நிதி ஆண்டிற்கான அறிக்கையின் படி 423539 சம்பவங்களில் 35 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் கள்ள நோட்டு தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் 127781 வழக்குகளை மட்டுமே தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் நிதியியல் ரகசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தன.

டெல்லி போலீஸாரின் தனிப்பிரிவு அண்மையில் 2.24 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்களை கைப்பற்றியது. 2010-11 நிதி ஆண்டில் 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza