Wednesday, January 18, 2012

சிரியா அரசை பாராட்டி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம்

syru

வாஷிங்டன்:அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் சிரியாவில் சமாதானம் தொடர்பான தீர்மானத்தை ரஷ்யா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்துள்ளது.

பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரைவு தீர்மானத்தில், அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் அனுமதித்து, சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதாக ரஷ்யா சிரியா அரசை பாராட்டியுள்ளது.

அதேவேளையில் மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதில் வருத்தம் தெரிவிக்கும் தீர்மானம், சிரியாவில் மோதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு அனைத்து பிரிவினரும் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறது.

கடந்த டிசம்பர் மாதமும்,ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா சிரியா விவகாரம் தொடர்பாக அமைதிக்கான தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்சு ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து தீர்மானத்தில் சில திருத்தங்களுடன் புதிய தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ரஷ்யா. ஆனால்,இப்புதிய தீர்மானமும் வெளிநாட்டு தலையீட்டை அனுமதிக்கவில்லை. ரஷ்யாவின் தீர்மானத்தின் மீது பாதுகாப்பு கவுன்சில் விரிவான விவாதம் நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சிரியாவில் அரபு லீக்கின் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என ஐ.நா அறிவித்துள்ளது. அரபு லீக்கின் கோரிக்கையை ஏற்று இதனை அறிவித்துள்ளது ஐ.நா. சிரியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க கெய்ரோவில் இந்த வாரம் அரபு லீக் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடத்த உள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza