டெஹ்ரான்:முதன் முதலாக உலக பிரசித்திப்பெற்ற திரைப்பட விருதான ‘கோல்டன் க்ளோப்’ விருதை பெற்ற மகிழ்ச்சியில் இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹதியும், நடிகர் பய்மான் முஆதியும் ஆழ்ந்துள்ளனர்.
மிகச்சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான ‘கோல்டப் க்ளோப்’ விருதை ஃபர்ஹதி இயக்கிய ‘நாதிர் அண்ட் ஸெமின்- எ ஸெப்பரேசன்’ என்ற திரைப்படம் பெற்றுள்ளது.
ஹாலிவுட்டில் ஃபாரின்ப்ரஸ் அசோசியேசன் 1944-ஆம் ஆண்டு முதல் வழங்கிவரும் விருதுதான் கோல்டன் க்ளோப்.
விருதைப்பெறும் வேளையில் ஃபர்ஹதி கூறியது: “எனது தேசத்தைச் சார்ந்தவர்கள் போர் வெறியர்கள் என கருதுவது தவறு. அவர்கள் சமாதானத்தையே விரும்புகிறார்கள்” என்றார் ஃபர்ஹதி. இரண்டு தம்பதியினர் பிரியும் வேளையில் ஏற்படும் உணர்ச்சிகரமான விளைவுகளை குறித்து பேசும் ‘எ ஸெப்பரேசன்’ பெர்லின் திரைப்பட விழாவிலும் கோல்டன் பியர் விருது உள்பட பல்வேறு வெகுமதிகளை வென்றுள்ளது.
ஈரானில் ஃபஜ்ரா திரைப்பட விழாவில் இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. ஈரானில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்று வரும் வேளையில் முதன் முதலாக பிரசித்திப் பெற்ற ‘கோல்டன் க்ளோப்’ விருதை ஈரான் திரைப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:
Post a Comment