Tuesday, January 31, 2012

நரோடா பாட்டியா:இனப் படுகொலைகள் நடந்த பகுதிகளை நீதிபதி பார்வையிட்டார்

imagesCANUNBC2

அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் என்ற நிலையில் நரோடா பாட்டியாவில் முஸ்லிம்களை இனப் படுகொலைச் செய்த பகுதிகளை இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டார்.

2002-ஆம் ஆண்டு முஸ்லிம்களை மோடி தலைமையிலான சங்க்பரிவார பயங்கரவாதிகளை கொன்று குவித்த வேளையில் மிகவும் கொடூரமான கூட்டுப் படுகொலைகள் நிகழ்ந்த பகுதிகளில் ஒன்றுதான் நரோடா பாட்டியா. 95 முஸ்லிம்கள் இங்கு கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர்.

நீதிபதி ஜோல்ஸ்னா யக்னிக்குடன் உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி வி.வி.சவுதரி, ஸ்பெஷல் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்களான அகில் தேசாயி, க்யாரங் வியாஸ், பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞரான ஒய்.பி.ஷேக், ஷம்ஸாத் பத்தான், எதிர் தரப்பு வழக்கறிஞர் ஆகியோருடன் சென்றனர்.

அரசு தரப்பு சமர்ப்பித்த ஆதாரங்களின் அதிகாரப்பூர்வ தன்மையை குறித்து நேரடியாக புரிந்துக்கொள்ள நீதிபதி தலைமையிலான குழு இனப்படுகொலை நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட்டது. ஒரு நாள் முழுவதும் வழக்கில் குறிப்பிடப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நீதிபதி சென்று பார்வையிட்டார்.

2002 பிப்ரவரி 28-ஆம் தேதி கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்திய பிறகு குற்றவாளிகள் தப்பிச்சென்ற வழிகளையும் நீதிபதி பார்வையிட்டார். தாக்குதலில் பாதிக்கப்பட்ட சில நபர்களிடம் வாக்குமூலங்களையும் நீதிபதி சேகரித்தார். கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்களை கூட்டாக தள்ளிய கிணற்றையும் அவர் பார்வையிட்டார்.

குற்றவியல் நடவடிக்கை சட்டம்(சி.ஆர்.பி.சி) 310-வது பிரிவின் படி நீதிபதி இனப்படுகொலை நிகழ்ந்த இடங்களை பார்வையிட்டுள்ளார். இச்சட்டத்தின்படி விசாரணையின் ஒரு பகுதியாக நீதிபதி குற்றம் நடந்த பகுதிகளை நேரடியாக பார்வையிட வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza